Breaking News

Is this the reason why Namitha Marimuthu left Big Boss? .. Information that goes viral!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமிதா மாரிமுத்து எதற்காக வெளியேற்றப்பட்டார் என்ற யூக அடிப்படையிலான காரணங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பங்கேற்ற நமிதா மாரிமுத்துவின் கதையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும் அளவுக்கு அத்தனை சோகங்கள் இருந்தன.

இதனால் அவருக்கு ஒரே நாளில் ரசிகர்கள் உயர்ந்து அவரே பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என சப்போர்ட் செய்தனர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் டிவி முன்பு 18 போட்டியாளர்களில் 17 பேர் மட்டுமே அமர்ந்துள்ளனர்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த பிக்பாஸ் ரசிகர்கள் யாரென பார்த்த போது நமிதா மாரிமுத்துவை காணவில்லை. இவர் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக சமூகவலைதளங்களில் ரிவ்யூவர்கள் தெரிவிக்கிறார்கள். மிகவும் டஃப் கன்டெஸ்ட்டென்டான நமிதா மாரிமுத்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூகம்

யூகம்

இவர் எதற்காக வெளியேறினார் என்பதற்கான காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. அதாவது தான் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் நமிதா பேசுகையில் திருநங்கைகள் என்றாலே ஏளனமாக பார்க்கிறீர்கள், நாங்கள் யாரையாவது பலாத்காரம் செய்ததை பார்த்திருக்கிறீர்களா, ஏமாற்றி எந்த பெண்ணையாவது திருமணம் செய்திருக்கிறோமா.. என் மனதில் இப்படி நிறைய கேள்விகள் உள்ளன.

100 நாட்கள்

100 நாட்கள்

இந்த கேள்விகளை நான் நிச்சயம் கேட்பேன். இந்த 100 நாட்களும் கேட்பேன் என தெரிவித்தார். இந்த 100 நாட்களில் இவர் அரசியல் ரீதியில் ஏதாவது பேசிவிடுவாரோ, அது நிகழ்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடுவோ என நினைத்து அவரை தாமாக வெளியேறுமாறு விஜய் டிவியினர் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ அவர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழையலாம் என்கிறார்கள்.

மிஸ் செய்ய விருப்பம் இல்லை

மிஸ் செய்ய விருப்பம் இல்லை

அவருக்கு ஏதோ பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை மிஸ் செய்ய அவர் விரும்பாததால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். நீண்ட காலம் அந்த வீட்டில் தங்கி பெயரை கெடுத்து கொள்வதற்கு பதிலாக அவராகவே மரியாதையுடன் வெளியேறியதும் ஒரு விதத்தில் நன்மைதான் என்கிறார்கள். ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

தாமரையுடன் மோதல்

தாமரையுடன் மோதல்

நாடக கலைஞரான தாமரைச் செல்வியுடன் மோதல் போக்கு ஏற்பட்டு நமிதா வெளியேறியிருக்கலாம் என்கிறார்கள். மேலும் திருநங்கையர்கள் நீண்ட காலமாக அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே சந்தித்து வருவதால் அவர்களை எளிதில் சீண்டி கோபம் கொள்ள வைக்க முடியும் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்பாவியான தாமரைச் செல்விக்கு ஒரு நாள் பாவனி மேக்கப் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வெள்ளை நிறத்தில் மீசை வரைந்தார்.

பாவனியுடன் திருமணம்

பாவனியுடன் திருமணம்

தாமரைக்கு ஏன் மீசை வரைந்து கொள்கிறாய் என ஏதோ போட்டியாளர் கேட்டதற்கு தாமரை "அதுவா நான் இன்னும் 10 ஆண்டுகளில் ஆணாகிவிடுவேன். அப்படியாகிவிட்டால் அழகாக இருக்கும் பாவனியை திருமணம் செய்து கொள்வேன், அதற்காகத்தான் மீசை வரைகிறேன்" என்றாராம். அப்போது அந்த வழியாக நமிதா கிராஸ் ஆகியுள்ளார். நமிதா 40 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தாமரை எதையோ பேசும் போது உன்னோட எதார்த்தமான மனதிற்கு நீ 40 என்ன 400 குழந்தைகளை கூட வளர்க்க முடியும் என சொல்லியுள்ளார். ஏற்கெனவே மீசை விவகாரத்தில் தன்னை கிண்டல் செய்ததாக நினைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நமிதா , திடீரென தாமரையிடம் பாய்ந்துவிட்டார். வாஷ் ரூமில் தாமரையிடம் 40 குழந்தைகள் என்ன 400 குழந்தைகளை கூட நீ வளர்ப்பே என நீ சொன்னே, நான் விட மாட்டேன், நான் விட மாட்டேன் என்றார் நமிதா. ஆனாலும் நமிதாவும் தாமரையும் அன்று இரவே சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது நமிதா எதற்காக வெளியேறினார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

  • ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்?
  • பிக் பாஸில் இருந்து திடீரென வெளியேறிய நமீதா மாரிமுத்து..? தாமாக வெளியேறியதாக தகவல்!
  • பொதுமக்களுக்கு தொல்லை..போக்குவரத்தை நிறுத்தவேண்டாம்..கான்வாய் கார்களை குறையுங்கள்..முதல்வர் உத்தரவு
  • சென்னை: பொண்டாட்டி கிட்ட காட்டிட்டு வர்றேன்: நூதன முறையில் நகை மோசடி… சிக்கிய நபர்!
  • ரூ 21,000 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கு.. சென்னையில் உள்ள ஆந்திர தம்பதி வீட்டில் என்ஐஏ அதிரடி ரெய்டு
  • BIGG BOSS டீ போட்டு தர்றேன்… அன்பா இருங்க…. தாமரையிடம் சரண்டரான நமீதா!
  • வெளியேறினாரா நமிதா?..வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுக்கிறாரா ஷகிலா மகள் மிலா?
  • சென்னை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை… நைசாக திருடிய கில்லாடி நபர் கைது
  • அது யாரு.. பாவனி அக்கா.. அபிஷேக் பதிலைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிச்ச அண்ணாச்சி
  • சென்னை: பேருந்தை முந்தி செல்ல முயன்ற பைக்… டயரில் சிக்கி இருவர் பலி
  • 'நாம எந்த வம்பு தும்புக்கும் போறதுல்ல' சென்னை ஒயின்ஷாப்பில் இளைஞரை தேடி வந்த வம்பு.. என்ன நடந்தது?
  • சென்னை: வேளச்சேரி மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்.... தமிழச்சி தங்கபாண்டியன் தகவல்
  • தொடர் ஊரடங்கு.. "பொங்கி எழுந்து" தமிழகத்திலேயே சாதனை செய்த கோவை மாவட்டம்.. ஹேப்பி டேட்டா!
  • கோயிலுக்கு போகும் துர்கா ஸ்டாலின்... அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எழுப்பிய கேள்வி
  • தந்தையை போலவே சென்னை மேயராக 'டெபுட்டாகும்' உதயநிதி ஸ்டாலின்.. அடுத்த ப்ரமோஷன்?
  • உங்க செல்போனுக்கு இந்த மெசேஜ் வருகிறாதா? ஜாக்கிரதை மறந்தும் திறக்காதீர்கள்
  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும் - பத்திரமா இருங்க மக்களே
  • 'பேரனோடு சேர்ந்து தமிழ் கத்துக்கிறேன்..'சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்ற பரேஷ் ரவிசங்கர் பேச்சு
English summary
Why Namitha Marimuthu gets walked out from Biggboss house?
 
 
 

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.