Is this the reason why Namitha Marimuthu left Big Boss? .. Information that goes viral!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமிதா மாரிமுத்து எதற்காக வெளியேற்றப்பட்டார் என்ற யூக அடிப்படையிலான காரணங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பங்கேற்ற நமிதா மாரிமுத்துவின் கதையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும் அளவுக்கு அத்தனை சோகங்கள் இருந்தன.
இதனால் அவருக்கு ஒரே நாளில் ரசிகர்கள் உயர்ந்து அவரே பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என சப்போர்ட் செய்தனர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் டிவி முன்பு 18 போட்டியாளர்களில் 17 பேர் மட்டுமே அமர்ந்துள்ளனர்.
பிக்பாஸ்
இதனால் அதிர்ச்சி அடைந்த பிக்பாஸ் ரசிகர்கள் யாரென பார்த்த போது நமிதா மாரிமுத்துவை காணவில்லை. இவர் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக சமூகவலைதளங்களில் ரிவ்யூவர்கள் தெரிவிக்கிறார்கள். மிகவும் டஃப் கன்டெஸ்ட்டென்டான நமிதா மாரிமுத்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூகம்
இவர் எதற்காக வெளியேறினார் என்பதற்கான காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. அதாவது தான் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் நமிதா பேசுகையில் திருநங்கைகள் என்றாலே ஏளனமாக பார்க்கிறீர்கள், நாங்கள் யாரையாவது பலாத்காரம் செய்ததை பார்த்திருக்கிறீர்களா, ஏமாற்றி எந்த பெண்ணையாவது திருமணம் செய்திருக்கிறோமா.. என் மனதில் இப்படி நிறைய கேள்விகள் உள்ளன.
100 நாட்கள்
இந்த கேள்விகளை நான் நிச்சயம் கேட்பேன். இந்த 100 நாட்களும் கேட்பேன் என தெரிவித்தார். இந்த 100 நாட்களில் இவர் அரசியல் ரீதியில் ஏதாவது பேசிவிடுவாரோ, அது நிகழ்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடுவோ என நினைத்து அவரை தாமாக வெளியேறுமாறு விஜய் டிவியினர் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ அவர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழையலாம் என்கிறார்கள்.
மிஸ் செய்ய விருப்பம் இல்லை
அவருக்கு ஏதோ பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை மிஸ் செய்ய அவர் விரும்பாததால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். நீண்ட காலம் அந்த வீட்டில் தங்கி பெயரை கெடுத்து கொள்வதற்கு பதிலாக அவராகவே மரியாதையுடன் வெளியேறியதும் ஒரு விதத்தில் நன்மைதான் என்கிறார்கள். ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
தாமரையுடன் மோதல்
நாடக கலைஞரான தாமரைச் செல்வியுடன் மோதல் போக்கு ஏற்பட்டு நமிதா வெளியேறியிருக்கலாம் என்கிறார்கள். மேலும் திருநங்கையர்கள் நீண்ட காலமாக அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே சந்தித்து வருவதால் அவர்களை எளிதில் சீண்டி கோபம் கொள்ள வைக்க முடியும் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்பாவியான தாமரைச் செல்விக்கு ஒரு நாள் பாவனி மேக்கப் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வெள்ளை நிறத்தில் மீசை வரைந்தார்.
பாவனியுடன் திருமணம்
தாமரைக்கு ஏன் மீசை வரைந்து கொள்கிறாய் என ஏதோ போட்டியாளர் கேட்டதற்கு தாமரை "அதுவா நான் இன்னும் 10 ஆண்டுகளில் ஆணாகிவிடுவேன். அப்படியாகிவிட்டால் அழகாக இருக்கும் பாவனியை திருமணம் செய்து கொள்வேன், அதற்காகத்தான் மீசை வரைகிறேன்" என்றாராம். அப்போது அந்த வழியாக நமிதா கிராஸ் ஆகியுள்ளார். நமிதா 40 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தாமரை எதையோ பேசும் போது உன்னோட எதார்த்தமான மனதிற்கு நீ 40 என்ன 400 குழந்தைகளை கூட வளர்க்க முடியும் என சொல்லியுள்ளார். ஏற்கெனவே மீசை விவகாரத்தில் தன்னை கிண்டல் செய்ததாக நினைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நமிதா , திடீரென தாமரையிடம் பாய்ந்துவிட்டார். வாஷ் ரூமில் தாமரையிடம் 40 குழந்தைகள் என்ன 400 குழந்தைகளை கூட நீ வளர்ப்பே என நீ சொன்னே, நான் விட மாட்டேன், நான் விட மாட்டேன் என்றார் நமிதா. ஆனாலும் நமிதாவும் தாமரையும் அன்று இரவே சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது நமிதா எதற்காக வெளியேறினார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.